பழனி அரசு மருத்துவமனைல் மருத்துவர் பணியில் இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி அரசு மருத்துவமனைக்கு விஷமருந்திய நிலையில்  வாலிபர் ஒருவரை அழைத்தவந்தபோது, அவசர சிகிச்சைபிரிவில்  மருத்துவர் பணியில் இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

திண்டுக்கல் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய மருத்துவமனையாக பழனி அரசு மருத்துவமனை விளங்குகிறது. இங்கு பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் பழனி மற்றும் கொடைக்கானல் பகுதியில் நடைபெறும் விபத்துக்களில் சிக்கும் நோயாளிகளும் பழனி அரசுமருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று பழனி 4வது வார்டு பகுதியை சேர்ந்த முத்து(24) என்ற வாலிபர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷமருந்தியதாகக் கூறி அவரை சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். அப்போது பழனி அரசு மருத்துவமனை அவசரப்பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து கேட்டபோது பணியில் உள்ள  மருத்துவர் பிரேத பரிசோதனைக்கு சென்றுள்ளதாக தெரிவித்த செவிலியர்கள், விஷமருந்திய வாலிபருக்கு  சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உள்ள அவசரசிகிச்சை பிரிவில் பணியில் உள்ள மருத்துவர்களை வேறுபணிக்கு அனுப்பினால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் நிலை என்னாவது என்றும், நோயாளிகளின் உயிரைக் காக்கும் பொன்னான நேரத்தில் மருத்துவர்கள் பணியில் இல்லாமல் நோயாளிகள் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு யார் பொறுப்பு என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே பழனி அரசு மருத்துவமனையில்  அவசர சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவர்களை வேறுபணிக்கு அனுப்பக்கூடாது என்று கோரிக்கை எழுந்துள்ளது.


" alt="" aria-hidden="true" />